Saturday, 20 December 2008
Friday, 19 December 2008
என் மதர்டங் தமிழ்-1
அளித்தது
Unknown
at
Friday, December 19, 2008
4
பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: மதர்டங்
Tuesday, 16 December 2008
எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி, நம்மைத் துக்கப்பட வைத்து விடுகிறார்கள்
மின்னஞ்சலில் வந்த ஒரு கதை. நன்றாக இருந்ததால் இங்கு பதிகிறேன்
எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி, நம்மைத் துக்கப்பட வைத்து விடுகிறார்கள். ஒரு சின்ன வார்த்தையில் நம்மைச் சோர்வடைய வைத்துவிடுகிறார்கள். இதிலிருந்து வெளிவர வழி இருக்கிறதா?'' என்ற தேடுதலுடைய ஒவ்வொருவருக்குமான கட்டுரை இது? ஒரு சின்ன கதை :
சந்தைக்குச் சென்று, நல்ல வலுவான கழுதை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியாகச் சென்ற இருவர், ``என்ன மனிதர்கள் இவர்கள்? இவ்வளவு வலுவான கழுதையை வைத்துக் கொண்டு நடந்து செல்கிறார்களே'' என்று பேசிக் கொண்டு சென்றார்கள்.
``ஆமாம்பா. ஏன் இப்படி நடந்து செல்ல வேண்டும்?'' என அவர்களுக்குள் பேசிக் கொண்டு, இருவரும் கழுதையின் மேல் அமர்ந்து கொண்டார்கள்.
கொஞ்ச தூரம் சென்றதும், எதிரில் வந்த மூன்று பேர், இருவரையும் வினோதமாகப் பார்த்தார்கள். ``என்னதான் கழுதையாக இருந்தாலும் , அதன் மீது இரண்டு பேரா ஏறிக்கொள்வது? என்ன மனிதர்கள் இவர்கள்?'' என்று சலித்துக் கொண்டார்கள்.
``ஒரு கழுதையின் மேல் இரண்டு பேர் ஏறிக் கொள்வது தவறுதான்'' என்று சொல்லி, தன்னுடைய மகனை மட்டும் கழுதையில் அமரவிட்டு இறங்கிவிட்டார்.
அடுத்து வந்த பெண்மணி, ``என்ன அநியாயம் இது? முதியவரை நடக்க வைத்து விட்டு, இளைஞன் இப்படி ஒய்யாரமாய் வருகிறானே! கலிகாலம்'' என்று திட்டிவிட்டுச் சென்றார்.
``ஆமாம்பா நான் நடந்துவருகிறேன். நீங்க நல்லா உட்கார்ந்து கொண்டு வாங்க'' என்று சொல்லி, தன் தந்தையை அமரவிட்டு இறங்கிக் கொண்டார்.
அடுத்து வந்த குடும்பஸ்தர் ஒருவர், ``சின்னப் பையனை நடக்கவிட்டு, இவ்வளவு பெரிய மனுஷன் உட்கார்ந்து கொண்டு வருவது என்ன நியாயம்?'' என்று சொல்லிக்கொண்டே சென்றார்.
இதைக் கேட்ட இருவரும், ``அப்பா, கழுதையை சும்மாவிட்டு நடப்பதும் தவறு. இரண்டு பேரும் கழுதை மேல் அமர்வதும் தவறு. இரண்டு பேரில், ஒருவர் ஏறிக்கொள்வதும் தவறு. அப்படியென்றால் என்னதான் செய்வது? சரி இப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று சொல்லி, இருவரும் கழுதையை, தங்களின் தோள்மீது தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்!
எதிரில் வந்தவர்களெல்லாம், ``நடத்தி கூட்டி வரப்பட வேண்டிய கழுதையைத் தூக்கிக்கொண்டு செல்கின்றார்களே. என்ன மடத்தனமான மனிதர்கள் இவர்கள்?'' என்று வினோதமாய் பார்த்தனர்.
மற்றவர்களின் விமர்சனத்திற்கு முக்கியத்துவமளித்தால் இப்படித்தான்... வாழ்க்கையே ஆட்டமாடிவிடும். அப்படி ஆட வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு உண்மையை ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்...
யாருக்கும் யாரையும் குறை சொல்வதற்குத் தகுதியில்லை. முழு மனிதராக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ அப்படித்தான் அவர்களும்.
இதிலிருந்து விடுபட ஒரேயொருவழி....
எது தர்மம்? எது நியாயம்? என்ற ஆராய்ச்சியோடு மட்டும் மற்றவர்களின் விமர்சனத்தை அணுகுங்கள். நியாயமற்ற விமர்சனங்களை முழுமையாக கண்டுகொள்ளாமல் விடுவதும் தவிர்ப்பதும்தான் தர்மம்... புத்திசாலித்தனம்...
அளித்தது
Unknown
at
Tuesday, December 16, 2008
4
பின்னூட்டங்கள்
Monday, 8 December 2008
பொன்சேகா பேட்டி- சில பத்திரிக்கை செய்திகள்
தினமலர் -
கொழும்பு : "விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சிக்கு இந்தியா உதவ வேண்டும். தற்போது நடந்து வரும் சண்டையில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ...
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் நிலை மீது விமானப்படை ...
அளித்தது
Unknown
at
Monday, December 08, 2008
1 பின்னூட்டங்கள்
Monday, 1 December 2008
ஜெயமோகனின் எனது இந்தியாவும் பாவமௌனமும்
இடுகையே தலைப்பு. தலைப்பே இடுகை.
அளித்தது
Unknown
at
Monday, December 01, 2008
0
பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: தலைப்பிடுகை