Saturday 19 January 2008

கடவுளின் நகரம் - 1

என்ன தம்பி எப்படியிருக்க? இலண்டன்லாம் எப்படி இருக்கு?

ரொம்ப குளிரா இருக்கு. சரி இன்னைக்கு ஆபீஸ் போகலயா?

இல்ல போகல. நீ வருவேன்னுதான் லீவு போட்டிருக்கேன்.

நண்பன்டா

சரி இப்ப என்ன ப்ளான்?

அண்ணா நகருக்கு விடு. ட்ரெஸ் எடுக்கனும்.

வாங்கிட்டு?

சொல்லு.

சொல்லு. ஈக்ள் போவோமா இல்ல இக்னைட்டுக்கு போவோமா?

ஈக்ளுக்கு போவோம்.

ஏன். யாரோ வருவாய்ங்கன்னு சொன்னியே அவய்ங்கள பாக்கணுமாக்கும்.

ம்

பாத்து?

சும்மாதான். வர்றாய்ங்களான்னு பாக்கதான்.

இதுக்கெதுக்கு அவ்வளவு தூரம். இக்னைடுக்கு போவோம். ஹெல்மெட் வேற இல்ல. புடிச்சாய்ங்கன்னா ட்ரங்கன் மங்கின்னு அதுக்கு வேற போட்டு தாளிச்சுருவாய்ங்க.

சரி விடு.

அடிச்சுட்டு படத்துக்கு போவோம்.

என்ன படத்துக்கு?

கற்றது தமிழ் போவோம்.

பாத்துட்டேன்னு சொன்ன.

பாத்தா என்ன இன்னொரு தடவ பாப்போம்.

படம் எப்படியிருக்கு?

பிரிட்டோவுக்கு புடிக்கல. எனக்கு புடிச்சிருக்கு. ஒனக்கும் புடிக்கும்னு நெனைக்கிறேன். சரி அப்புறம் என்ன. பொண்ணு பாக்குறது என்ன ஸ்டேஜுல இருக்கு.

பாத்துக்கிட்டே இருக்காய்ங்கடா. எவனும் ஒத்து வர மாட்டேங்குறாய்ங்க.

என்னடா இவ்வளவு சம்பளம் வாங்குற ஒனக்கே இப்பிடின்னா நாங்கள்லாம் என்ன சொல்றது.

சம்பளம் என்னடா சம்பளம். அவனவன் பி ஈ படிச்ச மாப்பிள்ளதான் வேணும்ன்றாய்ங்க. நம்ம சேரும்போது. பி ஈ-லாம் சேர்றது எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. இப்ப பாரு நண்டு நசுக்கெல்லாம் பி ஈ படிச்சிருதுங்க. நம்மலயும் படின்னா எங்க போறது. பத்திரிக்கைலதான போடணும் என்னத்தயாவது போட்டு மேல ஒரு கோட போட்டுக்கங்கடானு கேக்குறாய்ங்களா. ம் முட்டாள் மாப்பிள்ளைகளும் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கும் மணப்பெண்களும்.

இது நல்லாயிருக்கே. பேசாம இதயே தலைப்பா வச்சுருவேன்.

ங்கொய்யால. நான் நல்லா இருக்கிறது புடிக்கலயா? இப்படிலாம் தலைப்பு வச்சா சூடான இடுகைல வந்துரும். அப்புறம் நம்மள ரவுண்ட கட்டிருவாய்ங்க.

அப்பயே எப்படியாவது கஷ்டப்பட்டு பி ஈ சேந்திருக்கணும்டா.

நம்மளா வேணாம்னோம். அதெல்லாம் பார்ப்பன சதிடா.

பார்ப்பான்னா ஐயருதான? ஏன் அவிய்ங்க என்ன பண்ணாய்ங்க?

கே.பாலச்சந்தரும் மணிரத்னமும் சேந்துதான ஏ.ஆர். ரஹ்மான இண்ட்ரட்யூஸ் பண்ணாய்ங்க. அப்ப இருந்து நானும் பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கிறேன்னு ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணேன். இதையெல்லாம் "தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ஸ்டடீஸ்"னு ஒரு புக்கு போட்டம்னா மூணு வால்யூம்ல முப்பது எடிசன் போகும்.

ஏன் அதோட விட்ட. மொட்ட மாடில புள்ளைக படிக்க வரும்போது "அப் அப் மை ஃபிரண்ட் அண்டு க்விட் யுவர் புக்ஸ்"-னு புக்க தூக்கி வீசுனமே அதயுஞ்சொல்லு.

அத மூணாவது வால்யூம்ல சேத்துருவோம்.

இப்பதான் இலண்டன் போயிட்டியே இப்ப தேடி வருவாய்ங்கள்ல

நல்லா வருவாய்ங்க. அம்புட்டு தூரத்துக்கு புள்ளய அனுப்பிட்டு நாங்க இங்க என்னன்னு இருக்குறதுன்றாய்ங்க.

நீங்க அப்பிடி ஆளுகளா பாக்குறீங்க.

ஆமா நாங்க என்ன ஒங்கள மாதிரியா. இருக்குறதே ஊருக்கு பத்து பேரு. இதுல எங்கிட்டிருந்து வளச்சு வளச்சு தேடுறது.

நாங்க மட்டும் என்ன. நீங்க ஊருக்கு பத்துன்னா நாங்க பதினஞ்சு அவ்வளவுதான். சரி இலண்டன்ல யாரையாவது கரெக்ட் பண்ண வேண்டியதுதான?

உள்ளூர்லேயே ஓணான் புடிக்க முடியலயாம். அதுக்கெல்லாம் தெறம வேணும்டா. அப்பிடியே கரெக்ட் பண்ணாலும் அவிய்ங்கள்லாம் பேப்பர்ல தொடைக்கிறவய்ங்க. நமக்கு ஒத்து வராது.

நான் ஒன்னய பொம்பளப்புள்ளயத்தான் கரெக்ட் பண்ண சொன்னேன்.

மூதேவி அவிய்ங்க கல்ச்சர் வேற நம்ம கல்ச்சர் வேறன்னு சொன்னேன். மண்டையப் பாரு.

ஓ நீ அப்பிடி வாறீயா. திருச்சியில எதோ ஒரு பொண்ணு இருக்குன்னியே அதென்ன ஆச்சு.

அதுக்கு கல்யாணம் ஆயிருச்சு.

என்னடா சொல்றா? சொன்னியா இல்லயா?

நானும் சொல்லல அதுவும் சொல்லல. ஒனக்குத்தான் தெரியுமே. எனக்கு பொம்பளப்புள்ளைகட்ட பேசுறதுனாலே கைகாலெல்லாம் ஒதறும். அப்புறம் என்னத்த சொல்றது.

என்னடா இராமநாதபுரத்துக்காரனாயிருந்துட்டு இப்பிடி பயப்புடுற.

ஆமா அதுவும் மூச்சுக்கு முன்னூறு தடவ எங்கண்ணன் மோசமானவன் எங்கப்பா கோவக்காரரு எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க ஆ ஊ-ங்குது. அவங்க அண்ணன் திருவெறும்பூர்ல பெரிய இரவுடியாம்.

திருவெறும்பூரா? அது எங்க இருக்கு?

திருச்சி பக்கத்துலதான்.

அவிய்ங்க அங்க பெரிய இரவுடின்னா நம்ம இராம்நாட்ல இரவுடி. இதுக்கெல்லாம் பயந்தா லவ் பண்ண முடியுமாடா?

ஆமா இதேதான் கார்த்திட்ட சொன்னேன். அவன் எடுத்தோன்ன என்ன ஆளுகடா-ன்னான். உங்க ஆளுகதாண்டான்னேன். லவ் பண்ணேன்னா மொத நாந்தான் வெட்டுவேங்கிறான்.

அவரு வெட்டுவாராமா? அவன் ஒரு ஆளுன்னு சொல்றியேடா.

அதில்ல. அவன் சும்மா வெளயாட்டுக்குத்தான் சொன்னான். இருந்தாலும் இந்த விசயத்துல இவிய்ங்கள நம்ப முடியாது. மாப்ள மச்சாம்பாய்ங்க. ஜாதின்னு வந்துட்டா அதெல்லாம் பாக்க மாட்டாய்ங்க. இந்த சதீஸ் தங்கச்சி மேட்டர் என்னாச்சு. அரமனயோடல்ல தொரத்துனாய்ங்க. நீங்க தானடா ஒளிச்சுக்கிட்டு திரிஞ்சைங்க.

அத ஏண்டா இப்ப பேசுற. அவய்ங்க வெளயாட்டுக்கு நம்மள ஊருகாயாக்கிட்டு போய்ட்டாய்ங்க.

ஏண்டா.

ஆமா. அவ்வளவு நொம்பலத்த கூட்டுனாய்ங்க. கூப்ட்டு பேசுனோன்ன ஆளுக்கு ஒரு பக்கமா போயிட்டாய்ங்க. எடயில நம்ம பேருதான ரிப்பேராய் போயிருச்சு. சரி ஒனக்கு என்ன எடுக்கனும்.

சட்டை பேண்டு டை அப்புறம் ஆபீஸ் போட்டு போறமாதிரி ஒரு ஷூ.

ஆபீஸுக்கு டையெல்லாம் கட்டிட்டு போவியாடா?

கோட் ஆஃப் கண்டக்ட்ல கட்டச்சொல்லி சொல்லியிருக்கு. நெறய பேரு கட்டுறதில்ல.

சரி அப்பிடியே யூ டெர்ன் அடிச்சு வுட் லேண்ட்லயும் பேசிக்ஸ்லயும் ஒரு பார்வ பாத்துட்டு நேரா இக்னைட்டுக்கு விட்டுறலாம்.