Saturday 20 December 2008

என் மதர்டங் தமிழ்-2

முன்பு இலண்டனுக்கு வந்த புதிதில் நண்பர்கள் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். நாங்களேதான் சமையல். ஒருநாள் நாங்கள் கடைத்தெருவில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தோம். ஒரு காய்கறிக்கடை கல்லாவில் இருந்தவன் எங்களிடம் கேட்டான்.

"நீங்கள் தென்னிந்தியர்கள்தானே?"

"ஆம்"

"நீங்கள் தென்னிந்தியர்கள் என்று நான் சொன்னேன். இல்லை இலங்கைத்தமிழர்கள் என்று இவன் சொன்னான். கடைசியில் நான் சொன்னதுதான் சரியாக இருந்தது" என்றான் பக்கத்திலிந்தவனைக்காட்டி.

நண்பர்களில் ஒருவர் அவனிடம் கேட்டார் "நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்".

"இல்லை நாங்கள் இந்தியர்கள் இல்லை. பாகிஸ்தானியர்கள்"

Friday 19 December 2008

என் மதர்டங் தமிழ்-1

நான் சென்னைக்கு புதிதாக அப்போதுதான் வந்து புதிய வேலை ஒன்றை தேடி கண்டடைந்திருந்தேன். எனது நிறுவனத்தில் தயாரிக்கும் கருவி ஒன்றிற்கான சில பொருட்களை ஒரு கடைசல் பட்டறையில் கொடுத்திருந்தார்கள். நான் அதனை மேற்பார்வை செய்து முடிந்தபின் வாங்கி வரவேண்டும்.

ஆல் சைக்கிள் ரிப்பேர்ஸ் டன் ஹியர் என்று ஆங்கில எழுத்துக்களில் எழுதப்பட்ட கடைக்கு அருகில் அந்த பட்டறை இருந்தது. அங்கு போனதில் இருந்தே எனக்கும் அந்த பட்டறைக்காரருக்கும் பேச்சு வார்த்தையில் சில சலசலப்புகள் இருந்தன. கடைந்து முடிந்தபின் அவர் ராவிக்கொண்டிருந்தார். நான் வெகுநேரமாக பேசாமலேயே இருந்தேன். அது என் இயல்பு. பின் நான் பட்டறை வாசல் வழியாக தெருவைப் பார்த்தேன். தெருவெங்கும் நிறைய பூசணிகள் உடைக்கப்பட்டிருந்தன. ஏதாவது பேசலாமென அவரிடம் கேட்டேன்.
 
"இன்னைக்கு என்ன விசேசம்? தெருவெல்லாம் பூசணிக்கா ஒடச்சிருக்காங்க."
 
அவர் நிமிர்ந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். பின் கேட்டார்.
 
"ஒங்க மதர் லாங்வேஜ் என்ன?"
 
"தமில்தான் ஏன் கேட்குறீங்க?" என்றேன் நான்.
 
"இன்னிக்கு அமாவாசை. பின்ன ஒடைக்க மாட்டாங்களா? இதுகூட தெரியாதக்குறீங்க."

 "இல்ல. எங்க ஊர்ல அமாவாசைக்கு தெருவுல பூசணிக்காயெல்லாம் ஒடைக்க மாட்டோம்."


Tuesday 16 December 2008

எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி, நம்மைத் துக்கப்பட வைத்து விடுகிறார்கள்

மின்னஞ்சலில் வந்த ஒரு கதை. நன்றாக இருந்ததால் இங்கு பதிகிறேன்

எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி, நம்மைத் துக்கப்பட வைத்து விடுகிறார்கள். ஒரு சின்ன வார்த்தையில் நம்மைச் சோர்வடைய வைத்துவிடுகிறார்கள். இதிலிருந்து வெளிவர  வழி இருக்கிறதா?'' என்ற தேடுதலுடைய ஒவ்வொருவருக்குமான கட்டுரை இது? ஒரு சின்ன கதை :
சந்தைக்குச் சென்று, நல்ல வலுவான கழுதை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது
அந்த வழியாகச் சென்ற இருவர், ``என்ன மனிதர்கள் இவர்கள்? இவ்வளவு வலுவான கழுதையை வைத்துக் கொண்டு நடந்து செல்கிறார்களே'' என்று பேசிக் கொண்டு சென்றார்கள்.

``
ஆமாம்பா. ஏன் இப்படி நடந்து செல்ல வேண்டும்?'' என அவர்களுக்குள் பேசிக் கொண்டு, இருவரும் கழுதையின் மேல் அமர்ந்து கொண்டார்கள்.
கொஞ்ச
தூரம் சென்றதும், எதிரில் வந்த மூன்று பேர், இருவரையும் வினோதமாகப் பார்த்தார்கள். ``என்னதான் கழுதையாக இருந்தாலும் , அதன் மீது இரண்டு பேரா ஏறிக்கொள்வது? என்ன மனிதர்கள் இவர்கள்?'' என்று சலித்துக் கொண்டார்கள்.

``
ஒரு கழுதையின் மேல் இரண்டு பேர் ஏறிக் கொள்வது தவறுதான்'' என்று சொல்லி, தன்னுடைய மகனை மட்டும் கழுதையில் அமரவிட்டு இறங்கிவிட்டார்.

அடுத்து
வந்த பெண்மணி, ``என்ன அநியாயம் இது? முதியவரை நடக்க வைத்து விட்டு, இளைஞன் இப்படி ஒய்யாரமாய் வருகிறானே! கலிகாலம்'' என்று திட்டிவிட்டுச் சென்றார்.

``
ஆமாம்பா நான் நடந்துவருகிறேன். நீங்க நல்லா உட்கார்ந்து கொண்டு வாங்க'' என்று சொல்லி, தன் தந்தையை அமரவிட்டு இறங்கிக் கொண்டார்.
அடுத்து
வந்த குடும்பஸ்தர் ஒருவர், ``சின்னப் பையனை நடக்கவிட்டு, இவ்வளவு பெரிய மனுஷன் உட்கார்ந்து கொண்டு வருவது என்ன நியாயம்?'' என்று சொல்லிக்கொண்டே சென்றார்.

இதைக்
கேட்ட இருவரும், ``அப்பா, கழுதையை சும்மாவிட்டு நடப்பதும் தவறு. இரண்டு பேரும் கழுதை மேல் அமர்வதும் தவறு. இரண்டு பேரில், ஒருவர் ஏறிக்கொள்வதும் தவறு. அப்படியென்றால் என்னதான் செய்வது? சரி இப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று சொல்லி, இருவரும் கழுதையை, தங்களின் தோள்மீது தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்!

எதிரில்
வந்தவர்களெல்லாம், ``நடத்தி கூட்டி வரப்பட வேண்டிய கழுதையைத் தூக்கிக்கொண்டு செல்கின்றார்களே. என்ன மடத்தனமான மனிதர்கள் இவர்கள்?'' என்று வினோதமாய் பார்த்தனர்.

மற்றவர்களின்
விமர்சனத்திற்கு முக்கியத்துவமளித்தால் இப்படித்தான்... வாழ்க்கையே ஆட்டமாடிவிடும். அப்படி ஆட வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு உண்மையை ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்...

யாருக்கும்
யாரையும் குறை சொல்வதற்குத் தகுதியில்லை. முழு மனிதராக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ அப்படித்தான் அவர்களும்.

இதிலிருந்து
விடுபட ஒரேயொருவழி....

எது
தர்மம்? எது நியாயம்? என்ற ஆராய்ச்சியோடு மட்டும் மற்றவர்களின் விமர்சனத்தை அணுகுங்கள். நியாயமற்ற விமர்சனங்களை முழுமையாக கண்டுகொள்ளாமல் விடுவதும் தவிர்ப்பதும்தான் தர்மம்... புத்திசாலித்தனம்...

Monday 8 December 2008

பொன்சேகா பேட்டி- சில பத்திரிக்கை செய்திகள்

குறிப்பாக தினமலரின் தேசபக்தியைக் கவனியுங்கள். இது எந்த தேசத்துக்கான பக்தி?
 
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புலிகளை ஒழிக்க இந்தியா உதவ வேண்டும் : ராணுவ தளபதி பரபரப்பு
தினமலர் - 1 மணிநேரம் முன்பு
கொழும்பு : "விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சிக்கு இந்தியா உதவ வேண்டும். தற்போது நடந்து வரும் சண்டையில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ...
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி தட்ஸ்தமிழ்
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் நிலை மீது விமானப்படை ... தினத் தந்தி
மாலை மலர் - மாலை சுடர் - தட்ஸ்தமிழ் - தட்ஸ்தமிழ்
மேலும் 20 செய்திகள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Monday 1 December 2008

ஜெயமோகனின் எனது இந்தியாவும் பாவமௌனமும்

இடுகையே தலைப்பு. தலைப்பே இடுகை.