Sunday 22 June 2008

நான் பயங்கரன்

அது அப்படித்தான். அவர்கள் அப்படித்தான்.

இது இப்படித்தான். இவர்கள் இப்படித்தான்.

நாம் அவர்களை எதிர்ப்பதனால் இவர்களை எதிர்க்கவில்லை என்றில்லை. நாம் அவர்களை எதிர்க்கும் அதே வேளையில் இவர்களையும் எதிர்க்கிறோம்.

நாம் அவர்கள் அப்படித்தான் என்கையில் இவர்கள் இப்படித்தான் என்பதையும் இந்த அடிப்படையிலேதான் சொல்கிறோம்.

அவர்களும் இவர்களும் அதேதான்.

கட்டுரையை முழுவதுமாக வாசித்து எதிரே இருக்கும் சுவற்றில் போய் முட்டிக்கொள்ளவும்.

காமக்கதை-1

அவள் என்னருகில்தான் படுத்திருந்தாள். அவள் என்னருகில் படுத்திருந்தாள் என்பதைவிட நான் தான் அவள் என்னருகில் படுக்க வேண்டுமென்பதற்காக அரசியல் செய்திருந்தேன்.

ஆசையுடன் தான் பக்கத்தில் படுத்திருந்தேன். ஆனால் மனம் என்னவோ செய்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் இரண்டு உருண்டைகள் உருண்டன. திரும்பிப் படுத்துக்கொண்டேன்.

நள்ளிரவில் உடல் ஏனோ சூடாக ஆரம்பித்தது. திடீரென்று விழித்துக்கொண்டேன். என் கால் அவள் காலின் மீது இலேசாகப் பட்டுக்கொண்டிருந்தது. எப்போதும் அவ்வாறு நிகழ்கையில் விருட்டென்று காலை பின் வாங்கிக்கொள்வது என் வழக்கம். ஆனால் அந்த நள்ளிரவு சூடு என்னை அப்படி செய்யவிடவில்லை.

என் கால் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடையே அவள் கெண்டைக்காலைப் பிடித்து நசுக்கினேன். அவள் விழித்துத்தானிருந்திருப்பாள் போல. அவள் கைகளை என் மார்பின் குறுக்காகப்போட்டாள்.

எனக்கு சூடு இன்னும் ஏறியது. அவளை முழுவதுமாக அணைத்து ஆளுகைக்குட்படுத்தி இதழ்களைக் கவ்வினேன். அவள் பல்லிடுக்குகளின் மதுவை சுவைத்தேன். இதற்கு மேல் இதைப் பற்றி நான் விளக்கமாக சொல்ல விரும்பவில்லை. அன்றிரவு சற்று இனபமாகவே கழிந்தது. அடுத்த நாள் காலை ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டும் பார்க்க இயலவில்லை. சகஜமாக பேசவே பல நாட்கள் ஆயின.

பிறிதொரு நாள் நான் இதை எழுதி அவளிடம் காண்பித்தேன். ஆண்பாலுக்குப் பதிலாக பெண்பாலும் பெண்பாலுக்குப் பதிலாக ஆண்பாலும் இருந்தால் தனக்கு ஏற்ற மாதிரி இருந்திருக்கும் என்றாள்.

Tuesday 17 June 2008

நான் தசாவதாரம் பார்த்துக்கொண்டிருக்கையில்

நான் தசாவதாரம் பார்த்துக்கொண்டிருக்கையில்
பெரும் கூச்சல்
உலக நாயகன் என்கிறார்கள்
ஆஸ்கார் நிச்சயம் என்கிறார்கள்

அரங்கிற்கு வெளியே
யாரோ குருதி வடிகிறது என்று கத்தினார்கள்.
பகக்த்திலிருந்தவரைப்பார்த்தேன்
கிழக்கு விடிகிறது என்றார் சம்மந்தமில்லாமல்
புரியாமல் என்ன என்றேன்
பேசாமல் படத்தைப்பாருங்கள் என்றார்
திரும்பி கால்சட்டைப்பையிலிருந்த
கைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டேன்
படம் முடிந்ததும் காதலிக்குப் பேசவேண்டும்

Sunday 1 June 2008

எனது கிறுக்கல்கள்-1

பூங்காவில் குழந்தையுடன் நடை பயிலும் ஈழத்துப்பெண்
ஐபாடில் பாட்டுக் கேட்கும் பஞ்சாபி இளைஞன்
சைக்கிளில் செல்லும் கறுப்பு முதியவர்
புகைத்தபடி சாலையில் செல்லும் போலந்து பெண்
கைபேசியில் பேசியபடி செல்லும் எகிப்து இஸ்லாமியர்
அமைதியாகத்தான் இருக்கிறது உலகம்
##################################################
இன்று என்ன கிழமையென்று யாரோ கேட்டார்கள்
சட்டென்று சொல்லத்தெரியவில்லை
ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன
##################################################
நம்பியிருப்பேன்
என்னை பிடிக்கவில்லையென்று
நான் வரும்வரையில் உன் விழிகள் யாரையோ தேடிக்கொண்டிருந்ததை
நான் கண்டுகொள்ளும் முன்பு சொல்லியிருந்தாயானால்
##################################################
அடர் காபி பிடிக்கும்
முறுகலான தோசையும்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பிடிக்கும்
என்றெல்லாம் உன்னிடம் சொல்ல ஆசைதான்
என் தோளில் சாய்ந்து
காதல் பெருக
கண்கள் செருக
எனக்கு என்னென்ன பிடிக்கும் என்று நீ கேட்க விரும்பினால்
##################################################