Sunday 31 May 2009

பக்கத்து வீட்டில் படுகொலை

பக்கத்து வீட்டில்
படுகொலை
விவரமறிய
எண்டிடிவியின் உலக செய்திகளை
பார்க்க வேண்டும்
அல்லது
சன்னலை திறக்க வேண்டும்

ஸ்பார்டகசும் பிரபாகரனும்

சமீபத்தில் மூன்று வெவ்வெறு தொ.கா. அலைவரிசைகளில் மூன்று ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்தேன். பிரேவ் ஹார்ட், ஹோட்டல் ருவாண்டா மற்றும் ஸ்பார்டகஸ். இதில் பிரேவ் ஹார்ட்டும் ஹோட்டல் ருவாண்டாவும் முன்னரே பார்த்த வரலாற்றுத் திரைப்படங்கள். ஸ்பார்டகஸ் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்று நாயகன். இந்த மூன்று கதைகளிலும் ஈழ சோகத்தை ஒப்பிட முடிகிறது. ஸ்பார்டகஸை வென்ற ரோமானிய தளபதி சொல்கிறான், "ஸ்பார்டகஸை சிலுவையில் ஏற்றிய பிறகு அவனுக்கென்று சமாதியென்று ஒன்றும் இருக்கக்கூடாது. அவனது சாம்பல்கூட யாருக்கும் கிடைக்கக்கூடாது"

ஒவ்வொரு கதைக்கும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி இருக்கக்கூடும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வரலாற்றின் குரூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.