Monday 20 December 2010

ஜெயமோகனின் மாவோயிச எதிர்ப்புக் கட்டுரை

ஜெயமோகனின் மாவோயிச எதிர்ப்புக் கட்டுரை எனக்குள் சமிப காலமாக ஏற்பட்டு வரும் இடது சார்பு சிந்தனையை சற்றே அசைத்திருக்கிறது.
நான் ஜெயமோகனின் வலைப்பதிவை வாசிக்க ஆரம்பித்த புதிதில் அவரின் எழுத்துக்கள் சற்றே ஈர்க்க ஆரம்பித்தன. அவருக்கு மேற்கத்திய, இடதுசாரி, திராவிட அரசியல்களின் மேல் இருந்த காழ்ப்பு அவரைவிட்டு சற்றே விலக வைத்தது. இப்போதும் அவருக்கு காழ்ப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில் மாற்றமில்லை.
௧. //வன்முறை எப்போதும் அழிவுகளைத் தான் தரும்.//
௨. //இடதுசாரி அரசியலின் உள்ளுறையாக உள்ள ஒன்று, அதை நான் செயல்பாட்டாளரியம் [கம்மிஸாரிசம்] என்பேன், அதை சமூக அழிவுக்கு இட்டுச்செல்கிறது என்பதே வரலாறு.//
௩. //இடதுசாரி கோட்பாடுகள் சரியானவை, ஆனால் அவை உலகில் அமல்படுத்தப்பட்ட அத்தனை இடங்களிலும் அவ்வமைப்பு தவறாகவே நடைமுறைக்கு வந்தது என்று இடதுசாரிகள் பதில் சொல்வார்கள். இவர்கள் கொண்டு வரப்போகும் இடதுசாரி அரசு மட்டும் கோட்பாட்டுக்கு விசுவாசமான, மக்கள்நல அமைப்பாக இருக்கும் என நம்புப்படி கோருவார்கள்.//
௪. //ஒரு பழங்குடிச் சமூகம் நிலப்பிரபுத்துவத்தையும் அதன் வழியாக முதலாளித்துவத்தையும்தான் அடையமுடியும் . முதலாளித்துவத்தின் கல்வியை, பண்பாட்டை, உற்பத்தி முறைகளை அடைந்தபின் அதில் நிறைவுறாது அவர்கள் உற்பத்திச் சக்திகளை கைப்பற்றிக்கொண்டு கம்யூனிசம் நோக்கிச் செல்லவேண்டும்.//

போன்றவை ஏற்புடையவையாக இருக்கின்றன. யாராவது சரியான எதிர்வாதங்களை வையுங்கள்.

Monday 27 July 2009

fring இது VOIP தந்திரம் என்ற தயாளன் பாலாவின் இடுகைக்கு ஒரு பின்னூட்டம்.

fring இது VOIP தந்திரம் என்றொரு இடுகை இட்டிருக்கிறார். அதற்கு நான் பின்னூட்டமாக போட நினைத்ததை ஒரு இடுகையாக இடுகிறேன்.

ஃப்ரிங் மூலமாக கை மற்றும் தொலைபேசி அழைப்புகளையும் செய்யலாம். அதற்கும் SIP நுட்பம் பயன்படுகிறது. ஃபிரிங்-கில் SIP enable செய்து உங்கள் SIP நிரலையிட்டால் SIP கணக்கைப் பயன்படுத்தி கை மற்றும் தொலைபேசி அழைப்புகளையும் செய்யலாம். SIP கணக்கு தொடங்குவதற்கு smartvoip.com என்ற தளத்துக்கு செல்லவும். அங்கு ஒரு கணக்கு திறந்து கடனட்டை அல்லது பேபல்(paypal) மூலம் பணம் நிரப்பவும். அதில் SIP என்ற சுட்டியில் நுழைந்து வழிகாட்டல்களை பின்பற்றவும்.

இதில் ஒரு நிமிட இந்தியாவிற்கான அழைப்பு ஒரு யூரோ செண்ட் ஆகும். கிட்டத்தட்ட 65 பைசாக்கள். மேலும் பல நாடுகளுக்கு இலவச அழைப்புகளும் உண்டு.

Sunday 31 May 2009

பக்கத்து வீட்டில் படுகொலை

பக்கத்து வீட்டில்
படுகொலை
விவரமறிய
எண்டிடிவியின் உலக செய்திகளை
பார்க்க வேண்டும்
அல்லது
சன்னலை திறக்க வேண்டும்

ஸ்பார்டகசும் பிரபாகரனும்

சமீபத்தில் மூன்று வெவ்வெறு தொ.கா. அலைவரிசைகளில் மூன்று ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்தேன். பிரேவ் ஹார்ட், ஹோட்டல் ருவாண்டா மற்றும் ஸ்பார்டகஸ். இதில் பிரேவ் ஹார்ட்டும் ஹோட்டல் ருவாண்டாவும் முன்னரே பார்த்த வரலாற்றுத் திரைப்படங்கள். ஸ்பார்டகஸ் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்று நாயகன். இந்த மூன்று கதைகளிலும் ஈழ சோகத்தை ஒப்பிட முடிகிறது. ஸ்பார்டகஸை வென்ற ரோமானிய தளபதி சொல்கிறான், "ஸ்பார்டகஸை சிலுவையில் ஏற்றிய பிறகு அவனுக்கென்று சமாதியென்று ஒன்றும் இருக்கக்கூடாது. அவனது சாம்பல்கூட யாருக்கும் கிடைக்கக்கூடாது"

ஒவ்வொரு கதைக்கும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி இருக்கக்கூடும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வரலாற்றின் குரூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Tuesday 19 May 2009

ஓர் அடிமையின் பிரியாவிடை

 
இனி எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை.
ஈழம்
பயங்கரவாதி
தாயகக்கோட்பாடு
ஒப்பந்த மீறல்
இனப்படுகொலை
பேரினவாதம்
என்று எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை
தோல்வி முகத்தில் அறைந்த வலியுடன்
கூனிக்குறுகி திரும்பி நடந்து கொண்டிருக்கிறது
வெட்கங்கெட்ட வரலாறு
 
ஜெயமோகனின் இந்த கவிதையின் பாதிப்பு இது

Wednesday 13 May 2009

மகாத்மாக்கள் ஒழிக

கற்பழித்தவனை
கத்தி கொண்டெதிர்த்தவள்
கொல்லப்பட்டாள்
 
உறவுகள் கதறின
சிலர் கலகக்காரி என்றார்கள்
சிலர் வன்முறைக்காரி என்றார்கள்
 
இன்னும் சிலர்
எதிர்ப்பதில் பழுதில்லை
கத்தியெடுத்ததே குற்றம் என்கிறார்கள்
இன்னும்
 
கற்பழித்தவன்
கவனிக்கப்படாமல்
புனிதனாகிக்கொண்டிருக்கிறான்
கத்தியின் பொருட்டு

Tuesday 12 May 2009

NDTV talks about death toll

Death toll in swine flu reaches 61: WHOThe number of confirmed cases of swine flu or A(H1N1) virus has increased to 5,251, with 61 people dead from the disease around the world, the World Health Organisation (WHO) announced on Tuesday.