Monday 20 December 2010

ஜெயமோகனின் மாவோயிச எதிர்ப்புக் கட்டுரை

ஜெயமோகனின் மாவோயிச எதிர்ப்புக் கட்டுரை எனக்குள் சமிப காலமாக ஏற்பட்டு வரும் இடது சார்பு சிந்தனையை சற்றே அசைத்திருக்கிறது.
நான் ஜெயமோகனின் வலைப்பதிவை வாசிக்க ஆரம்பித்த புதிதில் அவரின் எழுத்துக்கள் சற்றே ஈர்க்க ஆரம்பித்தன. அவருக்கு மேற்கத்திய, இடதுசாரி, திராவிட அரசியல்களின் மேல் இருந்த காழ்ப்பு அவரைவிட்டு சற்றே விலக வைத்தது. இப்போதும் அவருக்கு காழ்ப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில் மாற்றமில்லை.
௧. //வன்முறை எப்போதும் அழிவுகளைத் தான் தரும்.//
௨. //இடதுசாரி அரசியலின் உள்ளுறையாக உள்ள ஒன்று, அதை நான் செயல்பாட்டாளரியம் [கம்மிஸாரிசம்] என்பேன், அதை சமூக அழிவுக்கு இட்டுச்செல்கிறது என்பதே வரலாறு.//
௩. //இடதுசாரி கோட்பாடுகள் சரியானவை, ஆனால் அவை உலகில் அமல்படுத்தப்பட்ட அத்தனை இடங்களிலும் அவ்வமைப்பு தவறாகவே நடைமுறைக்கு வந்தது என்று இடதுசாரிகள் பதில் சொல்வார்கள். இவர்கள் கொண்டு வரப்போகும் இடதுசாரி அரசு மட்டும் கோட்பாட்டுக்கு விசுவாசமான, மக்கள்நல அமைப்பாக இருக்கும் என நம்புப்படி கோருவார்கள்.//
௪. //ஒரு பழங்குடிச் சமூகம் நிலப்பிரபுத்துவத்தையும் அதன் வழியாக முதலாளித்துவத்தையும்தான் அடையமுடியும் . முதலாளித்துவத்தின் கல்வியை, பண்பாட்டை, உற்பத்தி முறைகளை அடைந்தபின் அதில் நிறைவுறாது அவர்கள் உற்பத்திச் சக்திகளை கைப்பற்றிக்கொண்டு கம்யூனிசம் நோக்கிச் செல்லவேண்டும்.//

போன்றவை ஏற்புடையவையாக இருக்கின்றன. யாராவது சரியான எதிர்வாதங்களை வையுங்கள்.

2 பின்னூட்டங்கள்:

  1. Anonymous said...

    //இடதுசாரி கோட்பாடுகள் சரியானவை, ஆனால் அவை உலகில் அமல்படுத்தப்பட்ட அத்தனை இடங்களிலும் அவ்வமைப்பு தவறாகவே நடைமுறைக்கு வந்தது என்று இடதுசாரிகள் பதில் சொல்வார்கள். இவர்கள் கொண்டு வரப்போகும் இடதுசாரி அரசு மட்டும் கோட்பாட்டுக்கு விசுவாசமான, மக்கள்நல அமைப்பாக இருக்கும் என நம்புப்படி கோருவார்கள்.//
    இது ஒன்று போதும் இடதுசாரி கோட்பாடுகளின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்க்கு.

  2. Anonymous said...

    ௪. //ஒரு பழங்குடிச் சமூகம் நிலப்பிரபுத்துவத்தையும் அதன் வழியாக முதலாளித்துவத்தையும்தான் அடையமுடியும் . முதலாளித்துவத்தின் கல்வியை, பண்பாட்டை, உற்பத்தி முறைகளை அடைந்தபின் அதில் நிறைவுறாது அவர்கள் உற்பத்திச் சக்திகளை கைப்பற்றிக்கொண்டு கம்யூனிசம் நோக்கிச் செல்லவேண்டும்.//

    இதைத்தான் மாவோவின் புதிய ஜனநாயகப் புரட்சி என்பர். மா-லே அமைப்புகள் இந்தியாவில் செய்வதற்கு திட்டமிட்டுள்ள புரட்சி முதலாளித்துவ புரட்சியே ஆகும். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் போராடுவது ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தை அமைத்திடவே, அதிலிருந்து அடுத்த கட்டமாகத்தான சோசலிச் சமூகம் அமைக்கப் போராடுவது மா-லே அமைப்புகளின் வேலைத் திட்டம்.