Friday 11 May 2007

அரவிந்தன் நீலகண்டன், மலர் மன்னன் மற்றும் ஆட்சிமொழி

அரவிந்தன் நீலகண்டன், மலர் மன்னன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை மறுத்து எழுதும் அளவுக்கு நான் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்றாலும், அவர்களின் வழக்கமான பரப்புரை உத்தி இதற்கு எதாவது பதில் எழுத வேண்டும் என்று என்னை உந்தி தள்ளியது. இது இப்போதைக்கு பொதுப்பார்வையில் வைக்கப்படாது. என்றாலும் ஒரு நாள் இது திரட்டிகளில் இடப்படும்.

// அது சர்வ தேச மக்கள் மொழியாகப் பல்வேறு ரூபங்களில் வழக்கத்தில் இருந்து வருவதை மொழியியலாளர் அறிவார்கள் //


சமஸ்கிருதம் சர்வதேச மொழி என்று எந்த மொழிவியலாளரும் சொல்வதாக நான் படித்ததில்லை. எனது வாசிப்பு அனுபவத்தில் (கொஞ்சம் குறைவானதுதான்) நான்கண்ட வரை சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய மொழி என்றே சொல்லப்படுகிறது. ஒரு மூல ஐரோப்பிய மொழியிலிருந்தே பண்டைய ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் கிளைத்தன. அம்மொழிகளைப்போலவே சமஸ்கிருதமும் கிளைத்திருக்கலாம் என்றே ஒரு கருதுகோள் வைக்கப்படுகிறது. சமஸ்கிருதம் இந்தியாவில் தோன்றியதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை.
இந்துத்வவாதிகள் அடிக்கடி சொல்வது, சமஸ்கிருதத்திலிருந்தே அனைத்து ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் தோன்றின. அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் பண்டைய மற்றும் தற்போதைய ஐரோப்பிய மொழிகளில் காண்ப்படுகின்றன. நான் ஒரு கேள்விகேட்கிறேன். நிறைய ஐரோப்பிய மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகள் புழங்குகின்றனவா? அல்லது நிறைய ஐரோப்பிய மொழி வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் புழங்குகின்றனவா?
இந்தியாவிலிருந்து ஒரு மொழி உலகம் முழுவதும் பரவியதென்றால் ஒரு இந்தியனாக எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அதை நிறுவ முயலுபவர்கள் பொய்யான தரவுகளை வைக்கிறார்கள் அல்லது வேண்டுமென்றே ஒரு பரப்புரையை நிகழ்த்துகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்துத்வவாதிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தமிழ் போன்ற தொன்மையும், பழமையும் இலக்கண, இலக்கியச் சிறப்புகளும் உடைய மொழிகளின் தனிச்சிறப்பை மறுக்கிறார்கள். தமிழும் சமஸ்கிருத்திலிருந்தே தோன்றியதாக ஒரு எண்ணத்தைத் தோற்றுவிக்க முயலுகிறார்கள். அது முடியாததால் மிகவும் தடுமாறுகிறார்கள். திராவிட மொழிகளின் தனிச்சிறப்பை வெளியில் கொண்டுவந்த கால்டுவெல் போன்றோரை காழ்ப்புனர்ச்சியோடு இகழ்கிறார்கள். சமஸ்கிருதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்து மற்ற மொழிகளை அல்லது மற்ற மொழிகளை பேசுபவர்களை சமஸ்கிருத்ததை நோக்கி தொழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சங்கங்கள் வைத்து வளர்த்த தமிழை அவ்வாறு செய்துவிட முடியாது எனபதை அவர்கள் உணர்வதில்லை.
தமிழும் இந்தியாவின் மொழிதான். சமஸ்கிருதத்தைப் போன்று இலக்கண இலக்கிய வளங்கள் உடைய மொழி. சமஸ்கிருதத்தைவிட ஒரு படி மேலாக இந்தியாவில் தோன்றியதாக அனைவராலும் நம்பப்படும் ஒரே மொழி. தொன்மையாலும், இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பதாலும், வேறு எந்த பிறநாட்டு மொழிகளின் தாக்கம் இல்லாததுமான தமிழுக்கு இல்லாத சிறப்பு ஒன்றும் சமஸ்கிருதத்துக்கு இல்லை. இங்கே இந்திய தேசியம் பேசுபவர்கள் உண்மையில் நமது நாட்டின் சிறப்பான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால் தமிழுக்கு அதற்குரிய இடத்தை முதலில் பெற்றுத்தரட்டும். யாராலும் பேசப்படாத ஒரு மொழிக்கு ஆட்சிமொழியாகும் தகுதி இருக்கிறதென்றால் அதை விட அதிக தகுதி இந்தியாவில் தோன்றிய, இன்றைக்கும் பேசப்படும் உலகத்தின் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றான தமிழுக்கு நிரம்பவே இருக்கிறது.

// நம் நாட்டிலுங்கூடப் பல்வேறு மொழி பேசும் சாதாரண மக்களிடையே ஏராளமான சமஸ்க்ருதச் சொற்கள் வெகு இயல்பாக நடமாடி வருகின்றன //


சம்ஸ்கிருத சொற்கள் இயல்பாக எப்படி சாதாரண மக்களிடம் புழங்க முடியும். இயல்பாக நடமாடுகிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வட இந்திய மன்னர்களின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் இவைதான் இந்திய மொழிகளில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை உருவாக்கியது. ஆகவேதான் வட இந்தியரின் கைக்கு எட்டாத தமிழகத்தில் குறைவாக இருந்தது. வட இந்தியரின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் ஆகியவற்றை தமிழகத்தில் தடுத்தது நிறுத்தியது மேற்குத் தொடர்ச்சி மலையே ஆகும். இப்படியெல்லாம் ஒரு மொழி பரவுவது இயல்பானதுதானென்றால் ஆங்கிலேயரின் படையெடுப்பு, ஆட்சி மற்றும் குடியேற்றம் ஆகியவற்றினால் உருவான ஆங்கில ஆதிக்கமும் ஆங்கில நாகரீகமும் கிருத்தவமும் இயல்பானதுதான். இதை ஒத்துக்கொள்கிறீர்களா?


// அவையில் சமஸ்க்ருதத்தின் அருமை அறியாதவர்கள் அதிகம் இருந்ததால்//


இதையே நான் உங்களுக்குத் திருப்பிச்சொல்லுகிறேன். தமிழர்களாக இருந்தும் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் தமிழின் அருமை அறியாமல்.

கடைசியாக ஒன்று சொல்கிறேன். தமிழ் தமிழர்களின் மொழி மட்டுமல்ல. இந்தியாவின் பெருமை.

5 பின்னூட்டங்கள்:

  1. Anonymous said...

    Explaining the qualities and capabilities of Sanskrit should not be considered as under estimating the qualities of Tamil. Tamil is another ancient and glorious language of the world still alive and it is also the language of our land making all of us proud of. But all southern languages such as Malayalam, Telugu and Kannada have nearly 70% of Sanskrit and Tamil is also having a substantial amount of Sanskrit. This does not mean Tamil is dependent of Sanskrit. We consider this as a natural interaction between languages.Tamil is spoken in lesser number of people and its influence in other languages is less compared to the influence of Sanskrit. Therefore, Tamil is not ideal to be the official language of the nation as a whole. This is not however disqualification for Tamil. It has its merits in its own way. We should over come our narrow mindedness in such matters.The influence of Sanskrit in all Indian languages is a proof for Sanskrit being the language of our motherland.
    -Senthil

  2. said...

    அன்புள்ள செந்தில்,

    தங்கள் வருகைக்கு நன்றி. எனது வலைப்பதிவுக்கு இதுவே முதல் பின்னூட்டம். அதற்கு மிகவும் நன்றி.
    உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். வலைப்பதிவுகளில் நான் இப்பொதுதான் எழுத ஆரம்பித்து இருக்கிறேன். ஆகையால் நிறைய தவறுகளுடனேயே எனது இந்த இடுகை இருப்பதை நான் உணருகிறேன். சமஸ்கிருதத்தின் பெருமையை பேசும் இடத்தில் தமிழைப்பற்றி நான் பேசி இருக்கக்கூடாது.
    சமஸ்கிருதத்தின் பெருமையை பேசுபவர்கள் இந்தியாவின் மொழியான தமிழை அதன் பெருமையை அதிகம் பேசுவதில்லை. இந்தியாவின் சிறப்புகளில் ஒன்றாக திராவிட மொழிக்குடும்பம் இந்தியாவில் தோன்றியதையும் அதில் தமிழின் சிறப்பையும் அது இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகவும் எடுத்துச்செல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தியாவின் சிறப்பாக சமஸ்கிருதம் பேசப்படும் அதே நேரத்தில் அது தமிழுடன் சேர்த்தே பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதத்தில் தறு செய்துவிட்டேன்.
    ஆட்சிமொழிக்கொள்கையில் இப்போது இருப்பதே சரி என்று எண்ணுகிறேன். அதிகம் பேர் பேசும் மொழியான இந்தி ஆட்சி மொழியாக இருப்பதே சரி. மற்றபடி தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.
    சில தவறுகள் இருந்தாலும் இந்த இடுகையை நீக்கவோ திருத்தவோ எனக்கு மனம் வரவில்லை. ஆதலால் இப்படியே இருக்கட்டும். நன்றி

  3. said...

    //இங்கே இந்திய தேசியம் பேசுபவர்கள் உண்மையில் நமது நாட்டின் சிறப்பான விசயங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பினால் தமிழுக்கு அதற்குரிய இடத்தை முதலில் பெற்றுத்தரட்டும்.//

    ம். நல்ல கருத்து. அவ்வாறு செய்ய அவர்களைத் தடுப்பது எது?

  4. Anonymous said...

    அரவிந்தன் பதிவுக்கு விளம்பரம் குடுப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவு ஒரு நல்ல சொதப்பல். கொண்டையை மறைக்கலையே அம்பி

  5. said...

    //அரவிந்தன் பதிவுக்கு விளம்பரம் குடுப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவு ஒரு நல்ல சொதப்பல். கொண்டையை மறைக்கலையே அம்பி//

    ஒரு சின்ன பின்னூட்டம் மனதை என்னென்னவோ செய்கிறது. எப்பா ஆளை விடுங்க நான் வெளியே இருந்து வெருமனே படிக்க மட்டும் செய்கிறேன்.
    இது நிஜமாகவே தேம்ஸ் நதிக்கரையிலிருந்து எழுதப்பட்டது. ஐப்பி கிய்ப்பியெல்லாம் வச்சு கண்டு பிடிங்க. இது டோண்டு ராகவனின் போலிப் பதிவும் அல்ல. அரவிந்தனுக்கு விளம்பரமும் அல்ல.
    நான் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் செளத்தாலில் பஞ்சாபி கடையில் முடி வெட்டினேன். எனக்கு கொண்டையும் இல்லை.
    இதையெல்லாம் நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.