Monday 17 September 2007

எனது ஒளிப்படப்பெட்டியில்-2

நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.



















5 பின்னூட்டங்கள்:

  1. Anonymous said...

    சற்றே அதிற்சியாகிவிட்டேன், உமயணன்...

    அந்த மோபைல் தொல்லைபேசிக்கு பின்னால் ரமணரின் புத்தகம் போல தெரிந்தது .

    அது உங்களுடயதா?

    உங்களிடத்தில் ரமணரைக் குறித்து எழுதுவதா வேண்டமா என்று நினைத்துபின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். இப்போ பாத்தால் அந்த புத்தகம்.....i am not an evangelist.

    சேகுவேராவும் கீழே...அவருக்கும் இதர போராளிகளுக்கும் எனக்கு வித்யாசம் தெரியவில்லை.violence is violence....

  2. said...

    அன்புள்ள சிஜிஎஸ்,
    அந்த சேகுவேரா மற்றும் இரமணருடைய புத்தகங்கள் இரண்டும் என்னுடையவைதான். இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியது. படிக்க நேரமில்லாமல் ஊரில் கிடந்தது. இந்த முறை ஊருக்கு போய்விட்டு வரும்போது அதை படிக்கலாமென்று எடுத்து வந்தேன்.
    சேகுவேரா பற்றிய புத்தகத்தை மட்டும் முழுவதும் படித்தேன். இரமணருடைய புத்தகத்தை தொடர்ந்து படிக்க முடியவில்லை. அதில் அவரை ஒரு தெய்வம் போல துதிபாடி எழுதியிருப்பது அதைப்படிப்பதில் ஆர்வம் இல்லாமல் செய்கிறது.
    சேகுவேராவின் புத்தகமும் துதிபாடல் நிரம்பியதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதற்கும் மேல் அவரைப்பற்றி கொஞ்சம் புரிந்துகொள்ள உதவியது. ஒரு புத்தகம் மட்டும் பத்தாது. இருந்தாலும் இந்த இரண்டு புத்தகங்களையும் படித்தபின்னால் என்னில் இரமணருடைய பிம்பம் கொஞ்சம் கீழிறங்கியிருக்கிறது. சேகுவேரா கொஞ்சம் உயர்ந்திருக்கிறார். கொள்கைகளுக்காக அல்ல. தனிமனிதராக.
    அந்த இரண்டு புத்தகங்களும் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த முரண்பாட்டுக்காகத்தான் அந்தப்படத்தை எடுத்தேன்.

  3. said...

    படங்களுக்கு நன்றி.
    இந்த ஆலயம் எவ்வூரில் உள்ளது?

  4. said...

    முதல் வருகைக்கு நன்றி வெற்றி.
    இந்த கோயில் இராமநாதபுரத்துக்கு அருகே திருவாடானை என்ற ஊரில் உள்ளது. சிவன் கோயில். மன்னிக்கவும் சாமி பெயரெல்லாம் சரியாகத்தெரியவில்லை. தாயாரின் பெயர் சிநேகவல்லி.

  5. said...

    வெற்றி,
    அந்த புகைப்படத்தை பெரிதாக்கி பார்த்தீர்களானால் தெளிவாகத் தெரிகிறது. சாமி பெயர் ஆதிரெத்தினேஸ்வரர். ஊர் திருவாடானை.