Monday 29 October 2007

மீண்டும் ஷகீரா

மீண்டும் ஷகீரா.

இந்த முறை இலண்டனிலிருந்து இந்த இடுகையை எழுதுகிறேன். இப்போது இலண்டனில் புது வேலை கிடைத்து வந்திருக்கிறேன். இதைச்சொல்ல தனி இடுகை தேவையா என்றுதான் தோன்றுகிறது. வேறென்ன செய்ய? இரண்டரை நாள் வார இறுதி. பொழுதே போக மாட்டேனென்கிறது. வெளியில் போகலாமென்றால் மழை பெய்கிறது.

பொழுதுபோகாமல் பெயரிலியின் பரந்த அபத்தியல்வாதமெல்லாம் படித்தேனென்றால் பாருங்கள். அப்படியும் முழுதாக படிக்க முடியவில்லையென்பது வேறு விசயம்.

4 பின்னூட்டங்கள்:

  1. said...

    DJ,
    மன்னிக்கவும் இடுகையை திரும்பவும் எழுதியதில் உங்கள் பின்னூட்டம் தவறிவிட்டது
    அது ஷகீராதான் ஷகீராதான். அவசரத்தில் பெரிய தவறு செய்துவிட்டேன்.

  2. Anonymous said...

    நல்லகாலம் உமயணன் ,காணல் போய்விட்டிர்களோ ஏன்ரு நினைத்தேன்.

    லண்டன் எனக்கு மிகவும் பிடிக்கும். இத்தனைகும் வெகு நாட்களுக்கு முன் போனது. ஏனோ லண்டனுக்கு சிந்தனாவாதி போன்ற தோற்ற்ம்.பாரீசுக்கு காதல் நகரம் போல.
    என் நண்பர் ஒருவர் மூலமாக லண்டன் ரிவியு ஆஃ புக்ஸ் கிடைத்தது. அவர்களுடய ஆன்லைன் லைப்ரரி முகவரி இதோ:www.londonlibrary.co.uk

    கேம்ப்ரிட்ஜும் ஆக்ச்ஃபோர்டும் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.கார்டியனில் ,அருண்ததி ராய் எழுதுவார் என்று நினைக்கிரேன்.

  3. said...

    பின்னூடத்திற்கு நன்றி சிஜிஎஸ்.

    லண்டன் எனக்கும் பிடித்திருக்கிறது. போனமுறை வந்திருந்தபோது நண்பர்கள் நிறைய பேர் இருந்தார்கள். வார இறுதியில் ஊர்சுற்ற கிளம்பிவிடுவோம். இந்த முறைதனியாக வந்திருப்பதால் பொழுதுபோகமாட்டேன் என்கிறது. நாளையிலிருந்து ஒரு இலங்கைத்தமிழர் வீட்டில் பேயிங் கெஸ்டாக போகவிருக்கிறேன்.

    எனக்கும் பாரிஸ் பார்க்கவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். எப்படியும் ஒரு நாள் போகாமல் விடமாட்டேன். அமேலி படம் பார்த்ததிலிருந்து பாரீஸ்போக வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாள் மனதில் இருக்கிறது. அமேலி நடந்த வீதிகளில் நடக்க வேண்டும். அந்த தானியங்கி புகைப்பட அறையின் குப்பைத்தொட்டியில் வேறேதேனும் புகைப்படம் கிடக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
    ஆன்லைன் நூலக சுட்டி கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. எனக்கு தமிழில் படிப்பது போல ஆங்கிலத்தில் படிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பெரும்பாலும் புத்தக்கடைகளில் நான் விரும்பும் தலைப்புகளில் ஆங்கில புத்தகங்கள் நிறைய பார்க்கிறேன். அதற்காகவேனும் ஆங்கிலத்தில் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நிறைய முயற்சி செய்கிறேன். எ பைரேட்ஸ் லவ் என்ற ஆங்கில நாவலை திக்கித்திணறி படித்துமுடித்தேன். ஆங்கில வலைப்பதிவுகளையும் படித்து வருகிறேன். பார்க்கலாம்.

  4. Anonymous said...

    உமயணன்,அமீலியை உங்களுக்கு அவ்வளவ்வு பிடிக்குமா.எனக்கு ஆட்ற்றே டொவ்டொவின் நடிப்பு பிடித்தது.உங்கள் வயதின் இன்னோஸென்ஸ் காரண்மாஅக கூட இருக்கலாம்.

    பாரிஸுக்கு நான் போனதில்லை.ஆனால் சில இந்திய நண்பர்கள் ரேஸிசம் உண்டு என்றர்கள்.


    ஆகையால் எதிர்பார்ப்புகளை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள் .நானும் தமிழ் வழிப்பயிர்ச்சியில் தான் படித்தீன். ஆனால் என் அப்பாவின் ஆங்கில புத்தக பைத்தியம் என்னை கட்டாயப்ப்படுத்தி ஆண்ங்கில புத்தகம் படிக்கவைத்து . இன்றளவும் அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்வேன் .எத்தனை உலகங்களை திறந்தது தெரியுமா? ஆகையால் கவலை படாதீர்கள்.நான் ஒரு கொடை விடுமுறை முழுவதும் அழுதுகொண்டே ஏதோ ஒரு கடினமான ஆங்கில புத்தகம் படித்தேன். டிக்ஷனரி தான் படித்தேன் என்று வைத்துகொள்ளுங்கள். . பிக்கடிலி சர்கஸ் என்று ஒரு இடம் உண்டு .அதுதான் பிரபல சார்லஸ் டிக்கென்ஸ் சிலகதைகள் நடக்குமிடம்