Saturday 12 January 2008

ஆகா.........பிரமாதம்........பிரமாதம்.........கூக்ள் ரீடரில் தமிழ்மணம்

கூக்ள் ரீடரில் தமிழ்மணத்தை இணைக்க முடிகிறது। "கண்டேன் சீதை" மாதிரி முதலில் சொல்ல வந்த விசயத்தை சொல்லி விடுகிறேன். வேறு யாரும் சொல்லிவிட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை சொல்கிறேன்

அலுவலகத்தில் ப்லொக்கர் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனவே நான் அதிகம் வாசிக்கும் தமிழ் வலைப்பதிவுகளை கூக்ள் ரீடரில் இணைத்து படித்து வருகிறேன். ஒவ்வொரு நாள் மாலையும் பதிவுகளை தேடித்தேடி ரீடரில் இணைத்து வருகிறேன். அது பெரிய நசல் பிடித்த வேலையாக இருக்கிறது.

தற்போது புதிதாக (ஏற்கெனவே இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. நான் இப்போதுதான் பார்க்கிறேன்) கூக்ள் ரீடர் தன்னில் அதிகம் இணைக்கப்படும் செய்தியோடைகளை பரிந்துரை செய்கிறது. அதன் மூலம் அதிகம் பேர் வாசிக்கும் பதிவுகள் நம் வாசலுக்கே வந்து இணைக்க சொல்லிக் கேட்கின்றன. அந்தவகையில் நான் இன்று பார்த்த போது கூக்ள் ரீடர் தமிழ்மணம் என்று ஒரு செய்தியோடையை பரிந்துரையில் காட்டியது. திறந்து பார்த்தால் தமிழ்மணமேதான். தினமும் திரட்டப்படும் இடுகைகளுக்கான செய்தியோடை அது.

இனி தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளின் செய்தியோடைகளை கூக்ள் ரீடரில் இணைக்கத்தேவையில்லை। அதற்கு பதிலாக தமிழ்மணத்தையே இணைக்கலாம். இனி தமிழ்மணத்தில் தினமும் வெளியிடப்படும் எல்லா இடுகைகளையும் கூக்ள் ரீடரில் பார்க்கலாம்.

தமிழ்மணத்தின் செய்தியோடை

http://www.thamizmanam.com/xml-rss2.php


என்ன ஒரு குறை மற்ற செய்தியோடைகளை இணைத்தால் கூக்ள் ரீடரிலிருந்தே சம்மந்தப்பட்ட பதிவைப் படிக்கலாம்। தமிழ்மணத்தை இணைத்தால் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைக் கொண்டு ஒவ்வொரு பதிவையும் திறந்துதான் படிக்க வேண்டும்.

அப்படியே 'ம' திரட்டிக்கும் ஒரு செய்தியோடை கொடுத்தால் தேவலை।

8 பின்னூட்டங்கள்:

  1. said...

    //அது பெரிய நசல் பிடித்த வேலையாக இருக்கிறது//

    நீங்க ஈழமா? நான் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு.. தமிழகத்திலும் இந்த வார்த்தை பிரயோகம் உண்டா ?

  2. said...

    சயந்தன்,

    வருகைக்கு நன்றி.

    நான் ஈழம் இல்லை. தமிழகம். உங்கள் ஊரிலிருந்து 85கிமி இந்த பக்கம் இராமநாதபுரம். இந்த வார்த்தை இராமநாதபுரத்தில் ரொம்ப பிரபலம். அதனால் வேண்டுமென்றேதான் இந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.

    உங்கள் ஊரின்,

    உறக்கம், தடுமம், உறைப்பு போன்ற வார்த்தைகளும் எங்கள் மாவட்டத்தில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள்தான்.

  3. said...

    test2

  4. said...

    நன்றி .பயனுள்ளதாக இருக்கு.உரல் பயன்படுத்திக் கொண்டேன்.

  5. said...

    ஆகா.........பிரமாதம்........பிரமாதம்.........சூடான இடுகையில் எனது பதிவு. எல்லாம் தலைப்பு செய்த மாயம்

  6. said...

    வருகைக்கு நன்றி கண்மணி

  7. said...

    நசல், முசும்பு, இஞ்சேருங்க(சென்ற தலைமுறை தலைவிகள்) இந்த சொற்பதங்கள் குமரி மாவட்டத்திலேயும் உண்டு.

  8. said...

    வருகைக்கு நன்றி சேவியர்.

    எங்கள் மாவட்டத்திலேயும் பெண்கள் கணவனை இங்கே பாருங்கள் என்று அழைப்பதற்கு பேச்சு வழக்கில் இங்கேருங்க என்று சொல்வதுண்டு. ஈழத்தமிழில் இங்கே என்று சொல்வதை இஞ்சே என்று சொல்வதைப் பார்த்தால் அதற்கும் இதற்கும் தொடர்பிருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது