Sunday 22 June 2008

காமக்கதை-1

அவள் என்னருகில்தான் படுத்திருந்தாள். அவள் என்னருகில் படுத்திருந்தாள் என்பதைவிட நான் தான் அவள் என்னருகில் படுக்க வேண்டுமென்பதற்காக அரசியல் செய்திருந்தேன்.

ஆசையுடன் தான் பக்கத்தில் படுத்திருந்தேன். ஆனால் மனம் என்னவோ செய்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் இரண்டு உருண்டைகள் உருண்டன. திரும்பிப் படுத்துக்கொண்டேன்.

நள்ளிரவில் உடல் ஏனோ சூடாக ஆரம்பித்தது. திடீரென்று விழித்துக்கொண்டேன். என் கால் அவள் காலின் மீது இலேசாகப் பட்டுக்கொண்டிருந்தது. எப்போதும் அவ்வாறு நிகழ்கையில் விருட்டென்று காலை பின் வாங்கிக்கொள்வது என் வழக்கம். ஆனால் அந்த நள்ளிரவு சூடு என்னை அப்படி செய்யவிடவில்லை.

என் கால் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடையே அவள் கெண்டைக்காலைப் பிடித்து நசுக்கினேன். அவள் விழித்துத்தானிருந்திருப்பாள் போல. அவள் கைகளை என் மார்பின் குறுக்காகப்போட்டாள்.

எனக்கு சூடு இன்னும் ஏறியது. அவளை முழுவதுமாக அணைத்து ஆளுகைக்குட்படுத்தி இதழ்களைக் கவ்வினேன். அவள் பல்லிடுக்குகளின் மதுவை சுவைத்தேன். இதற்கு மேல் இதைப் பற்றி நான் விளக்கமாக சொல்ல விரும்பவில்லை. அன்றிரவு சற்று இனபமாகவே கழிந்தது. அடுத்த நாள் காலை ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டும் பார்க்க இயலவில்லை. சகஜமாக பேசவே பல நாட்கள் ஆயின.

பிறிதொரு நாள் நான் இதை எழுதி அவளிடம் காண்பித்தேன். ஆண்பாலுக்குப் பதிலாக பெண்பாலும் பெண்பாலுக்குப் பதிலாக ஆண்பாலும் இருந்தால் தனக்கு ஏற்ற மாதிரி இருந்திருக்கும் என்றாள்.

6 பின்னூட்டங்கள்:

  1. Anonymous said...

    இரண்டே வரிகளில் காமக்கதை:

    குனிந்து நிமிர்ந்து வீட்டைப் பெருக்கினாள் வேலைக்காரி
    குப்பையானது மனது!

  2. said...

    போச்சுடா!

  3. said...

    ஒண்ணுஞ் சொல்லிக்க முடியல்ல..

    சூடான இடுகையில முன்னாடி வந்துட்டு இருக்கு.. கமெண்ட மாத்திரம் யார்தும் காணோம்.. :((

    என்ன சோதனையோ இந்த காமக்கதைக்கு :)

  4. said...

    அனானி, சுகுணாதிவாகர் மற்றும் சென்ஷி,
    வருகைக்கு நன்றி.

    திடீர்னு தோனிச்சு. கடகடன்னு தட்டச்சி படபடன்னு வலையேத்திட்டேன். தப்பு பண்ணிட்டேனோ?

  5. said...

    /இரண்டே வரிகளில் காமக்கதை:

    குனிந்து நிமிர்ந்து வீட்டைப் பெருக்கினாள் வேலைக்காரி
    குப்பையானது மனது!/

    அந்தக் கவிதை :

    கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி
    குனிந்து வளைந்து பெருக்கிப் போனாள்
    வாசல் சுத்தமாச்சு
    மனசு குப்பையாச்சு

  6. said...

    வருகைக்கு நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.